உள்ளூர் செய்திகள்

புத்தக கண்காட்சி

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியில் தமிழ்த்துறை, நாட்டு நலப்பணித்திட்டம், விவேகானந்தர் கேந்திர பண்பாட்டு மையம் இணைந்து ஆளுமை பண்பு மேம்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை, புத்தக கண்காட்சியை நடத்தியது.ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ் துவக்கி பேசினார். கல்லுாரி முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் பசுபதி, விவேகானந்த கேந்திரம் பயிற்சியாளர்கள் பேச்சியப்பன், ராமமூர்த்தி, குமரேஸ்வரி பேசினர். சுவாமி விவேகானந்தரின் தத்துமவம், போதனைகள் குறித்த புத்தக கண்காட்சி கல்லுாரி நுாலகத்தில் நடந்தது. கல்லுாரி மாணவர்கள் பேராசிரியர்கள், ஊழியர்கள் புத்தகங்களை பார்வையிட்டனர். கல்லுாரி நுாலகர் ராம்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை