உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்

போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் போட்டா ஜியோ எனும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயலாளர் கார்த்திகேய வெங்கடேசன் பேசினார். மாவட்ட துணை தலைவர் கண்ணன் நன்றிகூறினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ