மேலும் செய்திகள்
தீப்பற்றிய கார்: போலீசார் வழக்கு
23-Jun-2025
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சந்திரங்குளத்தில் இரு குடும்பத்தினரிடையே நடந்த சொத்து தகராறின் போது தாக்குதலுக்குள்ளான சதீஷ்குமார் 15 , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரியாபட்டி சந்திரங்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் 45. இவருக்கும் உறவினரான மகாலிங்கத்திற்கும் 55, சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது மகேந்திரனின் மகன் சதீஷ்குமார் தாக்குதலுக்குள்ளானார். பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். மகேந்திரன் புகாரில், மகாலிங்கம் மனைவி ராஜாமணி, மகன் சூரியராஜா, மகள் சுப்புலட்சுமி ஆகியோர் மீதும், ராஜாமணி புகாரில் மற்றொரு சூர்யராஜா மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுவன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என மகேந்திரன் போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளார்.
23-Jun-2025