உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பஸ் வர தாமதம்: பெண்கள் மறியல்

 பஸ் வர தாமதம்: பெண்கள் மறியல்

காரியாபட்டி: அ.முக்குளத்திற்கு டி. வேப்பங்குளம் வழியாக மதியம் செல்லக்கூடிய பஸ் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். காரியாபட்டியிலிருந்து பாப்பனம், வி. நாங்கூர், டி. வேப்பங்குளம் வழியாக அ.முக்குளத்திற்கு தினமும் 3 முறை பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் 2:20 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட வேண்டிய பஸ் 3:00 மணி ஆகியும் வரவில்லை. பஸ்காக காத்திருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் நின்று மறியலில் ஈடுபட்டனர். 3:00 மணிக்கு பஸ் வந்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்று பஸ்சில் ஏறினர். சீனிவாசன், கிளை மேலாளர், கூறியதாவது: கிரமப்புறங்களுக்கு சென்று வந்ததும் மதுரைக்கு ட்ரிப் எடுத்து வரும். நேற்று தெற்கு வாசல் பகுதியில் போக்குவரத்து டிராபிக் ஆனதால் பஸ் வர 25 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. பஸ் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக யாரோ சிலர் வதந்தியை கிளப்பி உள்ளனர். அது போன்று எந்த ஒரு திட்டமும் இல்லை. எப்போதும் போல பஸ் இயக்கப்படும். வதந்திகளை அப்பகுதி மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ