தென்னை மரங்களை பாதிக்காதவாறு பைபாஸ் ரோடு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் அமைக்கப்படவுள்ள பைபாஸ் ரோட்டை தென்னை மரங்கள் பெரியளவில் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.வத்திராயிருப்பில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. காலை, மாலை மற்றும் வேலை நேரங்களிலும், திருவிழா நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் பைபாஸ் ரோடு அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பிவந்தனர். இதனையடுத்து பைபாஸ் ரோடு அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர்.இதில் பெரும்பாலான விவசாய நிலங்கள் உள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தென்னை மரங்கள் அதிகளவில் பாதிக்கபடாத வகையில் ரோடுகள் அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட வேண்டுமென இந்திய கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி மற்றும் விவசாயிகள் கோரியுள்ளனர்.