மேலும் செய்திகள்
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
02-Apr-2025
மணிமேகலை விருது பெற அழைப்பு
06-Apr-2025
தண்டிக்கப்படாத நீதிபதிகள்!
22-Mar-2025 | 1
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும்சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்புறப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு 2024--25ம் நிதியாண்டிற்கு மணிமேகலை விருது வழங்க மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.கூட்டம் தொடர்ந்து முறையாக நடத்தப்பட்டிருப்பது, சேமிப்புத் தொகையினை பயனுள்ளதாக பயன்படுத்தி இருப்பது, வங்கி கடன் பெற்றிருப்பது, குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருப்பது, திறன் வளர்ப்பு, வாழ்வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பது, சமூக நல நடவடிக்கைகளில் பங்கெடுத்திருப்பது போன்றவவை தகுதிகள், என்றார்.
02-Apr-2025
06-Apr-2025
22-Mar-2025 | 1