பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக அழைப்பு
விருதுநகர்,: கூட்டுறவு சங்கங்கள், பால் சேகரிப்பு மையங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: பால்வளத்துறை கட்டுப்பாட்டில் மாவட்டத்தில்104 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 33 ஆயிரத்து 146 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 14 ஆயிரத்து 435 லிட்டர் ஆவின்மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அரசின் மூலம் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை, தரத்தின் அடிப்படையில் ஆண்டு முழுவதும் நியாய விலை, கால்நடைத் தீவனம், தாது உப்பு, விலையில்லா மருத்துவ சிகிச்சை, லாபத்தில்பங்கு, கடனுதவிபோன்றவை சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.எனவே ஆர்வமுள்ள நபர்கள் அருகிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்துபயனடையலாம். சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கவும் செய்யலாம். இதற்கு பால்வளம் துணைப்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.விவரங்களுக்கு 63743 00818, 94999 01557, 87547 22264 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.