கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர் : கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: இளம் சாதனையாளர்களுக்கான பி.எம்., யஸஷ்வி கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதன் படி ஓ.பி.சி., இ.பி.சி., டி.என்சி., ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 2025-26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அக். 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அக். 31க்குள் விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும். இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள் https://scholarships.gov.inதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம், என்றார்.