சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் முன்னோடி வங்கி மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.இங்கு செல்போன் பழுது நீக்குதல், டிரைவிங் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18--45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.கல்வித் தகுதியாக குறைந்தது 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை பயிற்சிக் காலம். சேர்ந்து பயன் பெற விரும்பினால் 98947- 53297, 94440 -94482, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 என்ற எண்களில் அழைக்கலாம், என்றார்.