உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளில் சேம்பர் அமைக்க அழைப்பு

பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளில் சேம்பர் அமைக்க அழைப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளில் சேம்பர் அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியதாவது: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் 211 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக புறநகர் பகுதிகளில் கழிவு நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்புகள் கழிப்பறையிலிருந்து (செப்டிங் டேங்க் செல்லாமல்) நேரடியாக இணைப்பதற்கு தேவையான சேம்பர்கள் வீட்டின் உள்ளே அமைக்கப்பட வேண்டும். இதற்கு வீட்டு உரிமையாளர்கள் 2 அடிக்கு 2 அடி அளவு இடத்தை ஒதுக்கி கொடுத்தால் சேம்பர் அமைக்கப்படும். இதற்கான செலவுகள் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் செய்யப்படும். இது போன்ற சேம்பர் அமைத்தால், பல ஆண்டுகள் ஆனாலும் பராமரிப்பு செய்வதற்கு எளிதாக இருக்கும். தற்போது பணிகள் நடந்து வரும் நிலையில் வீட்டில் வசிப்பவர்கள் இந்த திட்டத்துடன் ஒத்துழைத்து சேம்பர் கட்டிக் கொள்ளலாம்.பணிகள் முடிந்த பிறகு, சேம்பர் கட்ட வேண்டும் என கூறுபவர்களுக்கு சேம்பர் கட்டித்தரப்படும். ஆனால் அதற்கான செலவை அவர்களே ஏற்க வேண்டும். அந்தந்த பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தும் போது வீட்டு உரிமையாளர்கள் திட்டத்திற்கு ஒத்துழைத்து திட்டச் செலவிலேயே சேம்பர்களை கட்டிக் கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ