உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீப்பிடித்து எரிந்த கார்

தீப்பிடித்து எரிந்த கார்

சிவகாசி:சிவகாசி ஞானகிரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 54. இவர் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் மிஷின் டிரேடிங் கம்பெனி நடத்தி வருகிறார். தனக்கு சொந்தமான காரை நேற்று கம்பெனிக்கு எதிரே ரோட்டில் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அந்தக் கார் காலை 11:30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !