உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீப்பிடித்து எரிந்த கார்

தீப்பிடித்து எரிந்த கார்

காரியாபட்டி: துாத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், மனைவியுடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்கு சென்று வீடு திரும்பினார். காரியாபட்டி வக்கணாங்குண்டு அருகே வந்த போது தீப்பிடித்து எரிந்தது.டிரைவர் உக்கரபாண்டி காரை ஓரமாக நிறுத்தி, இருவரையும் கீழே இறக்கி விட்டார். தீ மளமளவென பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காரியாபட்டி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ