உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊராட்சி செயலர் உட்பட இருவர் மீது வழக்கு

ஊராட்சி செயலர் உட்பட இருவர் மீது வழக்கு

விருதுநகர்: விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய முத்துக்குமாரை தாக்கிய ஊராட்சி செயலர் முத்துவேல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த முத்துக்குமார் ஆகிய இருவர் மீது ஆமத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர். நவ.1ல் செங்குன்றாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் முத்துவேல் வரவு, செலவு அறிக்கையை வேகமாக வாசித்ததால், நிறுத்தி மெதுவாக வாசிக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். காயமடைந்ததாக முத்துக்குமார் அன்று மதியம் 12:30 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக ஊராட்சி செயலர் முத்துவேலும் புகார் அளித்தார். ஆமத்துார் போலீசார் இருவரும் மீதும் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ