உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சி.பி.எஸ்., ஒழிப்பு  இயக்கம் ஆர்ப்பாட்டம்

சி.பி.எஸ்., ஒழிப்பு  இயக்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தாலுகா, ஒன்றிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்்ராஜ்குமார், ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில்இணை ஒருங்கிணைப்பாளர் மலர்பாண்டியன், சாத்துார் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க பாலு, ராஜபாளையத்தில் வணிகவரி அலுவலகம் அரசு ஊழியர் சங்க கிளை தலைவர் முத்துக்குமார், திருச்சுழி ஒன்றிய, தாலுகா அலுவலகங்களில் இணை செயலாளர் சரவணன், காரியாபட்டியில் கிளை தலைவர் சீராளன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ