உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

திருச்சுழி: திருச்சுழி சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதியில் கல், மணல் குவாரிகள் என அதிகம் உள்ளன. குண்டாறும் இங்கு இருப்பதால் மணல் திருட்டும் நடந்து வருகிறது. குற்றச் செயல்களும் அடிக்கடி நடந்து வருவதால் இவற்றை கண்காணிக்க பஜார் பகுதிகள், குண்டாறு பாலம், திருமேனிநாதர் கோயில், திருச்சுழி எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருச்சுழியை சுற்றியுள்ள கிராமங்களிலும் முக்கியமான பகுதிகளில் கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவற்றின் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமில் இருந்து திருச்சுழி மற்றும் அதன் எல்லை பகுதி வரை துல்லியமாக கண்காணிக்க முடியும். திருட்டுச் சம்பவங்கள், சந்தேகப்படும் நபர்கள், திருட்டு மணல் லாரிகள் உள்ளிட்டவற்றை கண்டு பிடிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ