உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏழாயிரம்பண்ணையில் தேரோட்டம்

ஏழாயிரம்பண்ணையில் தேரோட்டம்

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.இக்கோயில் பொங்கல்விழா ஏப்.27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் ரிஷபம், சப்பரம், பூ பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் நகர்வலம் வந்தார்.மே 4 பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் அம்மனை வழிபட்டனர். நேற்று 11ம் நாளை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் பராசக்தி மாரியம்மன் நேற்று மாலை 4:00 மணிக்கு எழுந்தருளினார். மாரியம்மன் பக்தர்கள் மாலை 5:00 மணிக்குதேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோசமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர் நிலை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ