ஆபத்தான முறையில் குளிக்கும் சிறுவர்கள்
சிவகாசி: வெம்பக்கோட்டை அணையில் விபரீதம் அறியாமல் சிறுவர்கள் குளிப்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.வெம்பக்கோட்டை அணையில் தற்போது 15 அடி ஆழம் வரை தண்ணீர் உள்ளது. இங்கு வெம்பக்கோட்டை, இந்திரா நகர். கண்டியாபுரம் குண்டாயிருப்பு பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் குளிப்பதற்காக வருகின்றனர்.அணையில் இங்கு யாரும் குளிக்கக்கூடாது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை.குளிக்க வருகின்ற சிறுவர்கள், பெரியவர்கள் கண்காணிப்பு இன்றி தனியாகவே வருகின்றனர். அணையின் மேற்பகுதியில் இருந்து குதித்து விளையாடுகின்றனர்.சற்று கவனம் சிதறினாலும் நீச்சல் தெரியாத சிறுவர்கள் ஆழமுள்ள பகுதிக்கு சென்றாலும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே இங்கே சிறுவர்கள் குளிப்பதை கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.