சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:00 மணிக்குமேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.