உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிறிஸ்தவ போதகர் வீடு முற்றுகை

கிறிஸ்தவ போதகர் வீடு முற்றுகை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சர்ச் நிர்வாகத்தை பற்றி அவதுாறு பரப்புவதாக குற்றம் சாட்டி சர்ச் மத போதகர் வீட்டை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜபாளையம் காமராஜர் நகரில் செயல்படும் துாய பவுல் சர்ச்சில் 600 குடும்பங்களை சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஜான் கமலேசன் மத போதகராக உள்ளார். இதற்கு முன் இருந்த மத போதகர் மாற்றத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஜான் கமலேசனுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இவரை மாற்ற வேண்டும் என மதுரை பேராயருக்கு கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஜான் கமலேசன் வேறு நபர் மூலம் சர்ச் பற்றியும், அதன் நிர்வாகம் பற்றியும் அவதுாறு பரப்புவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். சர்ச் உறுப்பினர்கள் 50க்கு மேற்பட்டோர் நேற்று ஜான் கமலேசன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பினருக்கும் இடையே சமாதான கூட்டம் மூலம் சமரசம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து ஒரு மணி நேரத்துக்கு பின் கலைந்து சென்றனர்.ஏசுராஜன் டேனியல், துாய பவுல் ஆலய முன்னாள் செயலாளர்: ஜான் கமலேசன் திருச்சபையின் வரவு செலவினை முறையாக ஒப்படைக்கவில்லை. திருச்சபையின் வசூல் தொகையினை விதிகளை மீறி மதுரை பேராயரிடம் ஒப்படைக்கிறார். தனி நபரை துாண்டிவிட்டு பிரிவினைகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகிறார். போதகர் ஜான் கமலேசன் இது குறித்து தனது விளக்கத்தை நாளை தெரிவிப்பதாக கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ