மேலும் செய்திகள்
மாவட்டத்தில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம்
21-Apr-2025
அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி வியாகுல அன்னை சர்ச் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தமிழக கார்மல் சபையின் தலைவர் ஜெயராஜ் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். பாதிரியார் மரியதுரை, உதவி பாதிரியார்கள் தேவராஜ், டயஸ் ரெஜின், அம்புரோஸ், ஜோசப் வாஸ் முன்னிலை வகித்தனர். திருவிழா 9 நாட்கள் நடைபெறும். தினந்தோறும் சர்ச்சில் ஜெபமாலை நவநாள், திருப்பதி மறையுறை நடைபெறும். மே 9, 10 தேதிகளில் திருப்பலி நடைபெறும். வியாகுல அன்னையின் உருவம் வண்ண மலர்களால் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருப்பலி நடைபெறும். 15ம் தேதி திருப்பலி நடந்த பின் கொடி இறக்கம் செய்யப்படும்.
21-Apr-2025