உள்ளூர் செய்திகள்

துாய்மை பணி....

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் சார்பில் ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் தூய்மைப்பணி நடந்தது.முதல்வர் சரவணன், திட்ட அலுவலர் சவுந்தரபாண்டி ஆகியோர் தூய்மை பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஜெகநாதன், இளையராஜா, கிருஷ்ணமூர்த்தி, சுந்தர செண்பக லட்சுமி ,ஏராளமான மாணவர்கள் பங்கேற்று ரயில்வே ஸ்டேஷனில் பல்வேறு பகுதிகளில் கிடந்த மாசுக்களை அப்புறப்படுத்தினர்.ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா, ஒருங்கிணைப்பாளர் பாண்டி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை