உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் முதற்கட்ட சுற்றுச்சாலை விரைவில் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகாசியில் முதற்கட்ட சுற்றுச்சாலை விரைவில் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகாசி: சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் முதற்கட்ட பணிகளை விரைந்து முடித்து 2026 மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் , என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சுகபுத்ரா அறிவுறுத்தினார். சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் -- - சிவகாசி, எரிச்சநத்தம் - -சிவகாசி, விருதுநகர் --சிவகாசி, சாத்துார் -சிவகாசி - கழுகுமலை, சிவகாசி -- ஆலங்குளம், சிவகாசி -- வெம்பக்கோட்டை ஆகிய சாலைகளை இணைத்து 33.52 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டம் மூன்று பிரிவுகளாக செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக பூவநாதபுரம் - வடமலாபுரம் சந்திப்பு இடையே 9.92 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரூ.120 கோடியில் சுற்றுச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பெட்டி பாலம், குறுக்கு வடிகால் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் முடிந்து உள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக விஸ்வநத்தம் - வெங்கடாசலபுரம் சாலை முதல் சிவகாசி - ஆலங்குளம் சாலை இடையே 6.70 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரோடு அமைக்க ரூ.58.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட சுற்றுச்சாலை பணிக்கு மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கலெக்டர் சுகபுத்ரா சுற்றுச்சாலை திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது முதற்கட்ட பணிகளை விரைந்து முடித்து 2026 மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் காளிதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ