கலெக்டர் இடமாற்றம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் தற்போதைய கலெக்டர் ஜெயசீலன், சென்னை மாநகராட்சியின் சுகாதார பிரிவின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாநகராட்சியின் கமிஷனர் சுகபுத்ரா, விருதுநகர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் பொறுப்பேற்பார் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.