மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை ..
06-May-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகங்களின் அலட்சியத்தால் பல சமுதாய கூடங்கள் குப்பை கூளம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றன. இவற்றை பராமரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் சுப நிகழ்ச்சிகளை நடத்தும் பொருட்டு கிராமப்பகுதிகளில் துவங்கி பேரூராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் உள்ள சமுதாய கூடங்களில் சில கூட பயன்பாட்டில் உள்ளன. ஆனால் நகராட்சி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதே கிடையாது. நகர்ப்பகுதிகளில் மண்டபங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் மக்கள் வராமாட்டார் என நினைத்து பராமரிப்பை கைவிட்டு விட்டனரோ என தெரியவில்லை. ஆனால் நகர்ப்பகுதிகளில் இன்றும் மண்டபங்களில் வாடகை தர முடியாத எளிய குடும்பத்தினர் கோயிலில் திருமணம் நடத்தி வீட்டில் நெருக்கடியான சூழலில் உணவுக்கு பந்தி வைக்கின்றனர். இது போன்ற சூழலில் நகராட்சியில் செயல்படாத சமுதாய கூடங்களை பயன்படுத்தினால் உதவியாக இருக்கும்.ஆனால் இன்றோ பல சமுதாய கூடங்கள் பயன்படாமல் குப்பை கூளமாக மாறி உள்ளன. விருதுநகர் நகராட்சி 15வது வார்டு விஸ்வநாததாஸ் காலனியில் ஒருங்கிணைந்த வீட்டு வசதி, குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 2008-09ல் சமுதாய கூடம் கட்டப்பட்டது. துவக்கத்தில் செயல்பட்ட இந்த கூடம் நாளடைவில் செயல்படவில்லை. தற்போது ஆண்டுக்கணக்கில் முடங்கி உள்ளது. இதன் உட்பகுதி முழுவதும் குப்பை கூளமாக காணப்படுகிறது. எந்த பராமரிப்பும் இல்லை. இதே போல் நகரின் பல்வேறு சமுதாயக்கூடங்கள் பயன்படாமல் உள்ளன. மாவட்டத்திலும் இதே நிலை தான் தொடர்கிறது. இது தான் நகராட்சி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களின் நிலையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க வேண்டும். தவறுதலாக, அலட்சியமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் தரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்பகுதி ஏழைகளின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் நகராட்சி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களை செயல்படுத்த வேண்டும்.
06-May-2025