அ.தி.மு.க.,விற்கு அடுத்தாண்டு மூடுவிழா காங்., மாணிக்கம் தாகூர் எம்.பி., சாடல்
விருதுநகர்: மஞ்சள், சிவப்பு கொடி தெரிந்தால் உடனே கூட்டணிக்கு வருகிறார்கள் என்று கூறும் அளவிற்கு அ.தி.மு.க., வின் நிலைமை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., துவங்கிய கட்சி அடுத்தாண்டு முதல் மூடுவிழா காணப்போகிறது, என விருதுநகரில் காங்., மாணிக்கம் தாகூர் எம்.பி., தெரிவித்தார். விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரம் ஜவுளிபூங்கா பணிகளை ஆய்வு செய்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளால் அ.தி.மு.க., ஓட்டுக்களும் திருடப்படுகிறது என்கின்றனர். அ.தி.மு.க., வினருக்கு தைரியம் இருந்தால் இப்போதாவது தேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர்., குறித்து எதிர்த்து பேசட்டும். பீஹாரில் 62 லட்சம் ஓட்டுக்களை நீக்கியுள்ளனர். யார் ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் முடிவுகள் வெளியானால் தெரியும். லோக்சபா கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து போராட்டம் தொடரும். மஞ்சள், சிவப்பு கொடி தெரிந்தால் உடனே கூட்டணிக்கு வருகிறார்கள் என்று கூறும் அளவிற்கு அ.தி.மு.க., வின் நிலைமை உள்ளது. கொடநாடு கொலை வழக்கை தமிழக அரசு தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை செய்ய வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.,வின் ஓட்டுக்கள் 15 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்காது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., துவங்கிய கட்சி அடுத்தாண்டு முதல் மூடுவிழா காணபோகிறது. பா.ம.க., அன்புமணி மன உளைச்சலில் திசை தெரியாத பறவையாக உள்ளார், என்றார்.