உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பதவியே முடிய போகுது எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேதனை

பதவியே முடிய போகுது எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேதனை

காரியாபட்டி: கவுன்சிலர் பதவியேற்று 5 ஆண்டுகள் முடியப்போகிறது. மக்களின் கோரிக்கைகள் பல வைத்தும் எதுவும் நிறைவேறவில்லை. மக்கள் பிரதிநிதியாக எந்த காரியமும் செய்ய முடியாதது வேதனையாக இருக்கிறது என ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் குமுறினர்காரியாபட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முத்துமாரி தலைமையில், துணைத்தலைவர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,க்கள் வாசுகி, உஷா முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம்:முருகன், அ.தி.மு.க.,: கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு அதிகாரிகள் மதிப்பு கொடுப்பதே இல்லை. எதற்காக கிராம சபை கூட்டம், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகளை கூப்பிட்டு என்ன செய்திருக்கிறீர்கள் என கேட்பதற்கு கூட முன்வரவில்லை. மக்களின் பிரதிநிதிகளுக்கு இவ்வளவுதான் மரியாதையா. பி.டி.ஓ.,: தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்து அனுப்பப்படும். அதற்கான உத்தரவு வந்தவுடன் தீர்வு எட்டப்படும். சிதம்பரபாரதி, தி.மு.க.,: பொறியாளர்கள் சிலர் கூட்டத்திற்கு வரவில்லை. கடைசி கூட்டம் என்பதால் வரவில்லையா. இந்தக் கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு யார் பதில் கூறுவது. நாகர்பாண்டீஸ்வரி, அ.தி.மு.க.,: காரைக்குளம், சிறுகுளம் கண்மாய் கரை வலுவிழந்து உள்ளது. மழைக்காலம் என்பதால் அதிக மழை பெய்து கரைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் பச்சேரி ஊருணி கரை உடைந்துள்ளது. கவுன்சிலர் பதவியேற்ற 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்களின் கோரிக்கைகள் பல வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. பதவி முடியப்போகிறது. மக்கள் பிரதிநிதியாக இருந்து எந்த பயனும் இல்லை. வேதனையாக உள்ளது. திருச்செல்வம், அ.தி.மு.க.,: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா. ராஜேந்திரன், துணைத் தலைவர்: எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை