உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆண்டாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (நவ.,9) ஏராளமான வெளிமாவட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். தீபாவளி முடிந்த மறுநாளான இன்று தங்கள் வசிப்பிட நகரங்களுக்கு கார்களில் திரும்பிய ஏராளமான மக்கள், செல்லும் வழியில் ஆண்டாளை தரிசிக்க வந்தனர். இதனால் ஆடிப்பூர பந்தலில் கார்கள் நிறுத்த கூட இடமில்லாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் துளசி, மலர் மாலைகள் விற்பனை களை கட்டியது. புதுமண தம்பதிகள், ஏராளமான பெற்றோர் திருமண வயதுள்ள மகள்களுடன் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். வெளிமாவட்ட பக்தர்கள் வருகையால் பால்கோவா விற்பனை சூடு பிடித்தது. தேரடி, பஸ் ஸ்டாண்ட், பஜார் வீதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை