உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆம்புலன்ஸில் குவா குவா

ஆம்புலன்ஸில் குவா குவா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் சின்னத்துரை,30, இவரது மனைவி துளசி 25.நிறைமாத கர்ப்பிணியான துளசிக்கு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில், டிரைவர் பாலசுப்ரமணியன், மருத்துவ உதவியாளர் சங்கீதா முத்து ஆகியோர் 13 நிமிடங்களில் துளசியின் வீட்டிற்கு சென்று அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.ஆம்புலன்ஸ் மடவார்களாகம் வைத்தியநாத சுவாமி கோவில் அருகில் வரும்போது துளசிக்கு 3கிலோ எடையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவ உதவி செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை