உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாடிக்கையாளர் சேவை மாதம்

வாடிக்கையாளர் சேவை மாதம்

விருதுநகர்: பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் லோகநாதன் செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த ஏப். 2025ஐ வாடிக்கையாளர் சேவை மாதம் ஆக கடைபிடிக்கிறது. வாடிக்கையாளர் புகார்களை சம்பவ இடத்திலேயே தீர்க்கவும், சேவை விசாரணைகளை நிவர்த்தி செய்வதற்கும், பல்வேறு வாடிக்கையாளர் சேவை மையங்களில் சேவை முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணுதல், நிறைவான சேவை ஆகியவற்றில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு கவனம் செலுத்துகிறது.பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிஜிட்டல் புகார் கண்காணிப்பு இணையதள முகவரி http://cfp.bsnl.co.in/ மூலம் தங்கள் சேவைகள், கோரிக்கைகள், புகார்கள், கருத்துக்களை பதிவு செய்யலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ