மேலும் செய்திகள்
மங்கலத்தை பதம் பார்த்த பலத்த காற்று
08-Apr-2025
சாத்துார்: சாத்துாரில் மழையுடன் வீசிய சூறாவளியால் மரங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.சாத்துாரில் நேற்று முன்தினம் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை இடி மின்னலுடன் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. மின்சார வாரிய துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த காற்று வீச துவங்கியவுடன் நகர், ஊராட்சி பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.ஆனாலும் பலமாக வீசிய சூறாவளியால் வெங்கடாசலபுரம் கே.கே.நகர், குறிஞ்சி நகர், எஸ்.ஆர். நாயுடு நகர், குயில் தோப்பு, சாத்துார் நியூ காலனி, சிதம்பரம் நகர், ஒரிஜினல் கிணற்று தெரு, தில்லைநகர் மற்றும் பெரிய கொல்லபட்டி, வன்னிமடை, சிலோன் காலனி, கத்தாளம்பட்டி வாழவந்தாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேப்பமரம் புங்கை மரம், வாகை மரம், என 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்தது.கே.கே.நகர், குறிஞ்சி நகர் பகுதியில் பலவீனமாக இருந்த மின் கம்பங்கள் காற்றில் முறிந்தன. பல இடங்களில் தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருந்ததால் உடனடியாக மின்சார வாரியத் துறையினரால் மின் சப்ளை வழங்க முடியவில்லை.நத்தத்துப்பட்டி இருக்கன்குடிபொட்டல் பச்சேரி பகுதிகளில் மின்கம்பங்கள்மீது மரங்கள் முறிந்து விழுந்தன இதனால் இந்த ஊராட்சி பகுதியில் மின் சப்ளை பாதிக்கப்பட்டது.வெங்கடாசலபுரம் குறிஞ்சி நகரில் நேற்று மதியம் 3:00 மணி வரையில் மீட்பு பணி நடந்ததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. நகரில் முக்கிய தெருக்களில் மரங்கள் சாய்ந்ததால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.பல இடங்களில் உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அதனை சரி செய்ய மின்வாரியத் துறையினர் இரவு முழுவதும் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.எதிர்பாராமல் சூறாவளி காற்றுடன் பெய்த கோடை மழையால் சாத்துார் மற்றும் சுற்று கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மின்தடை ஏற்பட்டதால் பலரும் துாக்கமின்றி அவதிக்குள்ளாகினர்.வன்னி மடை கிராமத்தில் பொதுமக்கள் உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்த மரத்தை தாங்களாக முன்வந்து வெட்டி அகற்றி மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி புரிந்தனர்.சாத்துார் நகரில் ஒரு சில பகுதிக்கும் ஊராட்சியில் ஒரு சில பகுதிகளுக்கும் நள்ளிரவு 12:00 மணி அளவில் மின்சார சப்ளை வழங்கப்பட்டது.நகர் மற்றும் ஊராட்சி பகுதியில் மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்ததால் தொடர்ந்து தீயணைப்பு துறையினரும் மின்சார வாரியத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.* சிவகாசி அருகே சூறாவளியுடன் பெய்த மழைக்கு செங்கமலப்பட்டி, அனுப்பன்குளம், நாரணாபுரம், சொக்கலிங்கபுரம் பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 12 மணி நேரம் மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.
08-Apr-2025