உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் ரயில்வே கேட் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்

விருதுநகர் ரயில்வே கேட் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்

விருதுநகர்: விருதுநகர் - சாத்துார் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் ரோடு சேதமாகி பல மாதங்களாகிறது. இதை சீரமைக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் திண்டாடுவது தொடர் கதையாக மாறியுள்ளது. விருதுநகரில் இருந்து சாத்துார் செல்லும் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே கேட் ரோடு சேதமாகி பல மாதங்கள் ஆகிறது.விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சூலக்கரை, சாத்துார் செல்ல இவ்வழியாக செல்பவர்கள் திண்டாடி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை சீரமைத்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரயில்வே கேட் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுவதால் அதிகமான வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. எனவே ரயில்வே கேட் ரோட்டை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ