உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கல் சத்யா நகரில் சேதமான மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்

திருத்தங்கல் சத்யா நகரில் சேதமான மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யா நகர் பழைய சாட்சியாபுரம் ரோடு விலக்கில் ரோட்டோரத்தில் சேதம் அடைந்துள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யா நகர் பழைய சாட்சியாபுரம் ரோடு விலக்கில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் அமைக்கப்பட்டது. இதிலிருந்து உயர் அழுத்த மின் வயர் மூலமாக அப்பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. ரோட்டோரத்தில் மின்கம்பம் இருப்பதால் பெரிய காற்று அடித்தாலோ மழை பெய்தாலோ சாய்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ