உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதுக்கோட்டையில் சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

புதுக்கோட்டையில் சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

சிவகாசி : சிவகாசி அருகே புதுக்கோட்டையில் ரோட்டோரத்தில் சமுதாயக்கூடம் அருகே சேதம் அடைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகாசி அருகே புதுக்கோட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போதும் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் தொட்டியில் துாண்கள் முற்றிலும் சேதம் அடைந்து துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. தொட்டி அருகே சமுதாயக்கூடம் துணை சுகாதார நிலையம், பள்ளி சுகாதார வளாகம் உள்ளது. இதனால் எப்பொழுதும் இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். மேலும் சேதமடைந்த தொட்டியை கடந்து தான் வாகனங்கள் சென்று வருகின்றன. மக்கள் நடமாடும் போது வாகனங்கள் செல்லும்போது தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ