உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி பாம்பாட்டியில் ஆபத்தான குடிநீர் தொட்டி இடிப்பு

காரியாபட்டி பாம்பாட்டியில் ஆபத்தான குடிநீர் தொட்டி இடிப்பு

காரியாபட்டி: காரியாபட்டி பாம்பாட்டியில் ஆபத்தான நிலையில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டி தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் இடிக்கப்பட்டது. காரியாபட்டி பாம்பாட்டில் குடிநீர் சப்ளை செய்ய 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. மக்கள் கூடும் இடமான மந்தை, பள்ளி, காரியாபட்டி வையம்பட்டி ரோட்டோரத்தில் கட்டப்பட்டது. நாளடைவில் பில்லர்கள் சேதமடைந்து தொட்டியின் உறுதித் தன்மை கேள்விக்குறியானது. நீர் கசிவு ஏற்பட்டு வந்தது. எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் பள்ளி மாணவர்கள் இருந்தனர். விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக மேல்நிலைத் தொட்டி இடிக்கப்பட்டது. இதையடுத்து கிராமத்தினர்நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ