உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழியில் நாய்கள் விரட்டிய மான் மீட்பு

திருச்சுழியில் நாய்கள் விரட்டிய மான் மீட்பு

திருச்சுழி : திருச்சுழி அருகே நாய்கள் விரட்டிய மானை தீயணைப்பு துறை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.திருச்சுழி அருகே பச்சேரியில் இருந்து கரிசல்குளம் செல்லும் ரோட்டில் குட்டியுடன் ஒரு மான் வந்தது. இவற்றை கண்டு தெரு நாய்கள் மான்களை விரட்டியதில் தாய் மான் குட்டியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது. அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன், சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் வீரர்கள் மான் குட்டியை உயிருடன் மீட்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வனக்காப்பாளர் ராஜேந்திர பிரபுவிடம் மான் குட்டியை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ