நாய் கடித்து மான் பலி
காரியாபட்டி: காரியாபட்டி வரலொட்டி பகுதியில் நேற்று காலை கண்மாய்க்குள் சுற்றித்திரிந்த மானை தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் உயிரிழந்தது. வனத்துறையினர் மானை புதைத்தனர். அடிக்கடி அப்பகுதியில் மான்கள் விபத்தில் சிக்குவது, நாய்கள் கடித்து இறப்பது என தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.