உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாயில்பட்டியில் சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இடிப்பு

தாயில்பட்டியில் சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இடிப்பு

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழ தாயில் பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருக சேதமடைந்த மேல்நிலை குடிநீர் இடிக்கப்பட்டது.வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழே தாயில் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. தொட்டியில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் தொட்டி சேதம் அடைந்ததால் தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக அருகிலேயே புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.தொட்டியின் துாண்கள் மட்டுமல்லாது தொட்டி முழுவதுமே முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. மேலும் தொட்டி அருகே ஒரு ஆண்டிற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு என கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் இதுவரையிலும் திறக்கப்படவில்லை.மேலும் சேதமடைந்த தொட்டி அருகே சமையல் கூடமும் செயல் படுகின்றது. எனவே சேதம் அடைந்த தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ