ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உட்பட 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணை தலைவர்கள் கோபால், சேகர், செயலாளர் முருகன் செந்தில்வேல், இணைச் செயலாளர்கள் தேவராஜ், ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.