உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:விருதுநகர் பாத்திமா நகரில் டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடத்தியை தாக்குதலை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட தலைவர் மகாலட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அனைத்து இந்திய இளைஞர் மன்றம் சார்பில் ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன், இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சக்கணன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ