உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அடிப்படை வசதிக்கு ஏங்கும் தேசிகாபுரம் மக்கள்

அடிப்படை வசதிக்கு ஏங்கும் தேசிகாபுரம் மக்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேசிகாபுரம் கிராம மேற்குப் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அப்பகுதியினர் விரும்புகின்றனர். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது தேசிகாபுரம் கிராமம். 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் மேற்கில் புதிய குடியிருப்புகள் உருவாகி பல ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகள் செய்து தர வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மேற்கு தெரு பிள்ளையார் கோயில், சுந்தர்ராஜ் கடை அருகே தெருவிளக்கு அமைப்பதற்கான கோரிக்கையும் இதன் அருகே குடிநீர் தேவைக்காக உயர் தேக்க தொட்டி 1 லட்சம் கொள்ளளவில் கோரிக்கை உள்ளது. இப்பகுதி பேவர் பிளாக் கல் பதித்தல், மயான கரையில் காத்திருப்பு கூடம், தேசிகாபுரம் பகுதி கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டியது, பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல என கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து கோவிந்தராஜ்: மழைக்காலத்தில் இங்குள்ள மண் ரோடு சகதியாக மாறி சாக்கடை கலந்து சுகாதார கேடு ஏற்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி