மேலும் செய்திகள்
சூப்பர் ரிப்போர்டர் :
08-Nov-2024
அருப்புக்கோட்டை,: திருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்ததோடு எவ்வித வசதிகளும் செய்யாதாதல் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி ரமணா மகரிஷி பிறந்த இடம். நூற்றாண்டு புகழ்வாய்ந்த திருமேனிநாதர் கோயில் உள்ளது.காசி ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது போன்ற புண்ணியம் திருச்சுழி குண்டாற்றில் செய்தால் கிடைக்கும் என்பது ஐதீகம். திருச்சுழியைச் சுற்றி ஒரு சில கிராமங்களில் குடவரை கோயில்கள் உள்ளன. இதனால் திருச்சுழிக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இதை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சூழி அரசு மூலம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித வசதிகளும் இல்லை. சுற்றுலா பயணிகள் தங்கக்கூடிய பயணியர் விடுதிகள் இல்லை. ஒரு கழிப்பறை, குளியலறைகள் இல்லை. குண்டாற்றில் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு போதுமான வசதிகளில் இல்லாததால் அதிருப்தியில் செல்கின்றனர்.சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட திருச்சுழிக்கு விடுதி வசதிகள், நவீன வசதிகளுடன் கூடிய குளியல் அறைகள் கழிப்பறைகள், குண்டாற்றில் ஆண்கள் பெண்கள் உடை மாற்ற அறைகள், கழிப்பறைகள் உட்பட வசதிகளை அரசு செய்ய வேண்டும்.
08-Nov-2024