உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

 மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

விருதுநகர்: விலைவாசி உயர்வுக்கு ஏற்பஉதவித் தொகைையரூ.6 ஆயிரமாக உயர்த்துவது, படுத்த படுக்கையாக உள்ளோருக்கு ரூ.15 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன் பேசினார்.மாவட்ட பொருளாளர் அரோக்கியராஜ், நிர்வாகிகள் சுப்புராஜ், ரேணுகாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 147 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !