உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கழிவுநீர் வாகனங்கள் குறித்த ஆய்வை  அலட்சியம் செய்யும் மாவட்ட நிர்வாகம்  

கழிவுநீர் வாகனங்கள் குறித்த ஆய்வை  அலட்சியம் செய்யும் மாவட்ட நிர்வாகம்  

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கழிவுநீர் வாகனங்கள் குறித்த நகர், ஊரக உள்ளாட்சிகளின் ஆய்வை முறைப்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் செய்கிறது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் கொட்டப்படுவது குறைந்து நீர்நிலைகளிலும், காலிநிலங்களிலும் இரவோடு இரவாக கொட்டி செல்வது அதிகரிக்கிறது. மாவட்டத்தில் செப்டிக் டேங்க் கழிவுநீர் எடுக்கும் வாகனங்கள் வீடுகளில் எடுத்த கழிவுநீரை நகராட்சிகளின் சுத்திகரிப்பு நிலையங்களில் தான் கொட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. மாவட்டத்தில் எல்லா நகராட்சிகளிலும் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. விருதுநகர், சாத்துாரில் உள்ளன. அவற்றிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளது.இதற்காக சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத நகராட்சிகள், மாநகரட்சியிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. விருதுநகரில் கடந்த ஆண்டு சுகாதார ஆய்வாளர்கள் செப்டிக் வாகனங்களை ஆய்வு செய்தனர். பதிவேடுகள், முன்புறம் கண்ணாடியில் கடைசியாக கழிவுநீர் கொட்டிய விவர நோட்டீஸ் ஆகியவை உள்ளதா என கேட்டறிந்தனர். இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. செப்டிக் டேங்கில் கழிவுநீர் வாகனங்கள் வீடுகளில் சேகரிக்கும் கழிவுகளை நீர்நிலைகளில் இரவோடு இரவாக கொட்டி செல்வதாகவும், காலிநிலங்களில் கொட்டுவதாகவும் புகார் உள்ளது. இதனால் நிலத்தடி நீரும், நீர்நிலையில் பாசி படர்வதும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில் சுத்திகரிப்பு நிலையங்களில் கொட்டப்படுவதை உறுதி செய்ய அவர்களது எடுக்கும், வெளியேற்றும் பணிகளை கண்காணிக்க நகர், ஊரக உள்ளாட்சிகளை முடுக்கி விடுவது அவசியமாகிறது.ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. மாதந்தோறும் எத்தனை முறை கழிவுநீரை எடுத்து, வெளியேற்றம் செய்துள்ளனர் என்பதை ஆய்வு செய்துள்ளனரா என்பது கேள்விக்குறி தான்.எனவே மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க குழு அமைத்து முறைப்படி கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ