உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்ட டேக்வாண்டோ போட்டி

மாவட்ட டேக்வாண்டோ போட்டி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற டேக்வண்டோ போட்டி நடந்தது.சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி பங்கேற்றார். விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட மாவட்டத்தில் 19 பள்ளி கல்லுாரிகளில் இருந்து 230 மாணவர்கள் கலந்து கொண்டனர். 6, 9, 12, 17 அதற்கும் மேற்பட்டோர் என ஐந்து பிரிவுகளில் பல்வேறு ஏழைகளின் போட்டி நடந்தது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பெறுபவர்கள் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் விருதுநகர் மாவட்டம் சார்பில் பங்கேற்பர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராஜபாளையம் யுனைடெட் மெயின் கிளப், இரண்டாம் இடத்தை ரமணா சி.பி.எஸ்.இ., பள்ளி, ஏ.கே.டி தர்மராஜா சக்கனி அம்மாள் பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. ஏற்பாடுகளை மாவட்ட டேக்வாண்டோ செயலாளர் பாஸ்கர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி