தி.மு.க., சேர்மன் தம்பி கார் கண்ணாடி உடைப்பு
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயண கூட்டம் நடந்தது. இதற்காக பஸ் ஸ்டாண்டில் ஏராளமான தொண்டர்கள் கூடினர். பழனிசாமி கூட்டத்திற்கு வந்து கொண்டிருப்பதாக மைக்கில் அறிவிப்பு செய்தபடி இருந்தனர். அப்போது காரியாபட்டி பேரூராட்சி தி.மு.க., சேர்மன் செந்தில் தம்பி சவுந்தர் மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி காரில் அவரை ஏற்றிக்கொண்டு கூட்டத்திற்கு மத்தியில் சென்றது. அப்போது அ.தி.மு.க., தொண்டர்கள் தாக்கியதில் கார் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பின் போலீசார் கூட்டத்தினரை விலக்கி காரை வெளியில் அனுப்பினர்.