நகராட்சியுடன் இணைக்க தி.மு.க., வினர் எதிர்ப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சி விரிவாக்க பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருக்குமரன் நகர், ராமலிங்க நகர், காமராஜர் நகர், புளியம்பட்டி நெசவாளர் காலனி உள்ளிட்ட புறநகர் பகுதிகள் பல உள்ளன. இவற்றில் புறநகர் பகுதிகளை மட்டும் அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து, அப்பகுதி மக்கள் மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பாலையம்பட்டி புறநகர் பகுதி தி.மு.க., வினர் புறநகர் பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை பி.டி.ஓ., சூரியகுமாரியிடம் மனு கொடுத்தனர்.