வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோடிகள் கொட்டப்பட்ட இடம் திராவிட மாடல்களின் வீடுகள். அப்படியிருக்க எப்படி தண்ணீ தேங்காமல் இருக்கும் தேக்கமடையாமலிருக்கு அது என்ன திராவிட மாடல் சாராயமா சொல்லுங்க
நகராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிதிகளை ஒதுக்குகின்றன. இவற்றை வைத்து நகராட்சிகள் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், ரோடு, வாறுகால் உள்ளிட்ட பணிகளை செய்கின்றன. பணிகளை முறையாக தரமானதாக செய்யாமல் கடமைக்கு செய்வதால் அவை மக்களுக்கு பயன்படாமலேயே போகிறது. செலவளித்த நிதியும் வீணாகிறது. அருப்புக்கோட்டை நகராட்சி 16வது வார்டில் உள்ள திருநகரம் பகுதியில் மழைக்காலங்களில் தெருக்களில் வெள்ளம் தேங்கி விடுவதால், விருதுநகர் மெயின் ரோட்டில் ரூ.18 லட்சம் நிதியில் மெயின் வாறுகால் அமைக்கப்பட்டது. தற்போது மழைக்காலமானால் தெருக்களில் மீண்டும் வெள்ளம் தேங்குகிறது. மலையரசன் கோயில் தென் வடல் தெருவில் ரூ.18 லட்சம் நிதியில் வாறுகால் அமைக்கப்பட்டது. பணி துவங்கும் முன்பே அப்பகுதி மக்கள் தெருவில் வாறுகால் தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்தும் வலுக்கட்டாயமாக பயன்படாத வாறுகாலை அமைத்து நிதியை வீணடித்துள்ளனர். நாடார் மயான ரோட்டில் ரூ.50 லட்சம் நிதியில் வாறுகால் அமைத்துள்ளனர். சீராக இல்லாததால் கழிவுநீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே தரமற்ற வாறுகாலை அமைத்து பயன்படுத்த முடியாததால், மீண்டும் நிதியை செலவளித்து அதுவும் பயன் படாமல் போயுள்ளது. புதுக்கடை பஜாரில் பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கி விடுவதால் மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து பூக்கடை பஜாரில் ரூ.50 லட்சம் நிதியில் வாறுகால் அமைக்கப்பட்டது. முறையான பணி செய்யப்படாததால் சிறிய மழைக்கு கூட பஜார் வெள்ளத்தில் மிதக்கிறது. இது போன்று நகராட்சி மூலம் கோடிகளை கொட்டி செலவளித்து செய்யப்படும் வளர்ச்சி பணிகள் மக்களுக்கு பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பிற நகராட்சிகளிலும் இதே நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடிகள் கொட்டப்பட்ட இடம் திராவிட மாடல்களின் வீடுகள். அப்படியிருக்க எப்படி தண்ணீ தேங்காமல் இருக்கும் தேக்கமடையாமலிருக்கு அது என்ன திராவிட மாடல் சாராயமா சொல்லுங்க