உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் குடிநீர் பிரச்னை; எம்.எல்.ஏ., கோரிக்கை

ஸ்ரீவி.,யில் குடிநீர் பிரச்னை; எம்.எல்.ஏ., கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் கலெக்டருக்கு ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ. மான்ராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக 15 முதல் 20 நாட்கள் வரை குடிநீர் சப்ளை செய்யப்படாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அடிப்படை குடிநீர் தேவைக்காக பணம் கொடுத்து குடிநீர் பெரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியில் வாழும் மக்களின் நலன் கருதி தினமும் குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ