உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாதம் ஒரு முறை குடிநீர் சப்ளை, திறந்தவெளி கழிப்பறை

மாதம் ஒரு முறை குடிநீர் சப்ளை, திறந்தவெளி கழிப்பறை

ராஜபாளையம்: மாதம் ஒரு முறை குடிநீர் சப்ளை, திறந்தவெளி கழிப்பறை, தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடுஉட்பட பல்வேறு பிரச்சனைகளால் தெற்கு வெங்காநல்லுார் அண்ணா நகர் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ராஜபாளையம் தெற்கு வெங்கா நல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் குடியிருப்பு அருகே குப்பை கொட்டி தீ வைப்பதால் சுவாசக் கோளாறு, தெருக்களில் நாய்கள் அதிகரிப்பால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டி உள்ளது. இப்பகுதி வீடுகளில் சுகாதார வளாகம் இல்லாததால், திறந்தவெளிகளை பயன்படுத்தும் பரிதாப நிலை உள்ளது. பொது மக்களுக்கான குளியல் தொட்டி காட்சி பொருளாக மாறி உள்ளது. இப்பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் பிரதான ஓடை கழிவுகள் சேர்ந்து சுகாதார கேடு ஏற்படுத்தி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் முகம் சுளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை