உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வறண்டு வரும் பேயனாறு நீர்பிடிப்பு பகுதிகள்; ஸ்ரீவில்லிபுத்துாரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வறண்டு வரும் பேயனாறு நீர்பிடிப்பு பகுதிகள்; ஸ்ரீவில்லிபுத்துாரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு பேயனாறு நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருவதால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமும், செண்பகத் தோப்பு பேயனாறு மூலமும் நகரில் குடிநீர் சப்ளை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.இந்நிலையில் நகரில் பல்வேறு பகுதிகளில் 10 நாட்களைக் கடந்தும் குடிநீர் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நகரின் நீர் ஆதாரமான பேயனாற்றில் நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருவதால் போதிய அளவிற்கு தினமும் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இதே போல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திலும் தினமும் வழங்கப்பட வேண்டிய தண்ணீரும் கடந்த சில நாட்களாக சரிவர வழங்கப்படவில்லை.இதனால் நகரில் குடிநீர் சப்ளை நாட்கள் இடைவெளி அதிகரித்து மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை போதுமான அளவு குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் கூறுகையில், செண்பகத் தோப்பில் 9 கிணறுகள் உள்ள நிலையில் தற்போது 2 கிணறுகளில் இருந்து தான் குடிநீர் கிடைக்கிறது. நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே உள்ளூர் நீர் ஆதாரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருந்த போதிலும் தாமிரபரணி திட்டத்தின் மூலம் கூடுதல் குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி